Header Ads



பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுத் தட்டுப்பாடு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளினால் அமைதியின்மை


பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருள்களுக்கு தட்டுபாடு காணப்படுவதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதிகாரிகள் மீது குற்றஞ்சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,  சிற்றுண்டிச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கடந்த ஒரு மாத காலமாக போதுமானளவு திரவப்பால் விநியோகம் முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உணவு விநியோகப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மில்கோ நிறுவனத்திடம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் பால் விநியோகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.