Header Ads



நாங்கள் தலைமைத்துவம் வழங்கவேண்டும் என, மக்கள் வேண்டுகோள்களை விடுக்கின்றனர்


அரசாங்கத்தை ஜனநாயக முறையில் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க  தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களை போல பொருளாதாரநெருக்கடி ஏற்பட்டு  பல வாரங்களிற்கு பின்னர் மக்கள் - பெருமளவு மத்தியதர வர்க்கத்தினர் நாட்டை காப்பாற்றுமாறு எங்கள் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்களை கைவிட்டுள்ள ஏனைய எதிர்கட்சி குழுக்கள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்  -களைப்படைந்துவிட்டனர் வேதனையில் உள்ளனர் என ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொட பேரணியில் மிகப்பெருமளவானவர்கள் கலந்துகொண்டமையே இதற்கான சான்று என அனுரகுமார தெரிவித்துள்ளார்.

அடுத்த பேரணி பொலனறுவையில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யகூடிய அவர்கள் குறித்து கவனம் செலுத்தக்கூடிய  அரசாங்கத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் திட்டங்களில் மும்முரமாக உள்ளோம், மக்களின் ஆதரவு அதிகரிக்கின்றது –என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அரசாங்கத்திற்கு ஆதரவான வர்த்தகர் ஒருவர் தலைமையிலான குழுவினர் எங்கள் பேரணியை குழப்பமுயன்றனர்-கம்பஹாவிலும் அவர்கள் இதேநடவடிக்கையில் ஈடுபட்டனர்,நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராகிருந்தோம்,மக்கள் வெள்ளத்தை பார்த்ததும் அவர்கள் பின்வாங்கிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

எங்களால் புதிய மாற்றத்தை மதி;ப்பிட முடிகின்றது – நாங்கள் தலைமைத்துவம் வழங்கவேண்டும் என மக்கள் நேர்மையான வேண்டுகோள்களை விடுக்;கின்றனர் நாங்கள் அதற்கு தயாராகிவருகின்றோம் எனலும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நிச்சயமான உண்மை sir

    ReplyDelete

Powered by Blogger.