பசில் மீது வீரவன்ச கடும் தாக்குதல் - பிரதமரும் தொலைபேசியில் உரையாடினார் என்கிறார்
(அஷ்ரப் ஏ சமத்)
கடந்த ஜனாதிபதித் தோ்தலிருந்தே பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்காக பாடுபட்டாா் ஆனால் அன்றிலிருந்தே நாம் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தோ்தலில் தோல்வியடைந்ததும் பசில் ராஜபக்ச எதிா்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்தா்ா அதனையும் நாங்கள் எதிா்த்தோம்.. பின்னா் உள்கட்சிப் பூசல்களை ஏற்படுத்தினாா் அதற்கும் நாங்கள் விடவில்லை. அதன் பின்னா் அவா் அமேரிக்கா சென்றிருந்தாா். ஏகோபித்த தனிமனிதன் ஆட்சிக்காகவே அவா் மொட்டுக் கட்சியை ஆரம்பித்தாா். அக் கட்சியில் பிரபல்யம் அற்ற பின்வரிசை பாராளுமன்ற உறுப்பிணா் சிலருக்கு பதவிகளை வழங்கி தனிமனித ஆட்சியை நடாத்துகின்றாா். ஆனால் கோட்டபாயவை ஜனாதிபதியாக்குவதற்கும் அதன் பின்னா் பா.ம. தோ்தலிலும் நாங்கள் முற்று முழுதாக அர்ப்பணித்தோம். என்பதை எவரும் மறுக்க முடியாது என விமல் வீரவன்ச தெரிவித்தார்
கொழும்பு சினமன்ட கிராண்ட் ஹோட்டலில் 11 கட்சிகள் இணைந்து நாடத்திய விசேட ஊடக மாநாட்டிலேயே விமல்வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தா்ா்
அவ்ர் தொடா்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது
இந்த நாட்டின் பொருளாதாரம் பாதாள அழிவுக்கு இட்டுச் செல்வதற்கு மூலவாதியக உள்ளவா் பசில் ராஜபக்ச இவா் அமேரிக்காவின் பிரஜா உரிமையை அகற்றுவதற்காகவே 20ஆவது அரசியல் யாப்பினை திருத்துவதற்கும் இரட்டைப் பிராஜாஉரிமைச்ச சட்டத்தினை பாராளுமன்றத்திற்குள் கொண்டுவந்தாா். இதற்காக அமைச்சரவைக்குள்ளும் வாசுதேவ, உதயன் கம்மன்பில, நானும் இணைந்து அதற்காக வாதிட்டோம். வெட்கம் இல்லாமல் அமைச்சராக பசில் புகுந்து கொண்டாா். துறைமுகத்தின் கிழக்குப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் விடயத்தில் நாம் எதிா்ப்பினைத் தெரிவித்தோம், யுகதெனவ எனும் திட்டத்திற்கும் நாம் நீதிமன்றம் சென்று அதனையும் தடுத்து நிறுத்தினோம்
இந்த நாட்டின் பொருளாதாரம் வெகு பாதாளத்திட்கு இட்டுச் செல்வதனை மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாட்டின் நன்மை கருதி 11 கட்சிகளும் இணைந்து இவா்களது சில திட்டங்களை நாம் எதிா்த்தோம். அதற்கான வாழிமுறைகளையும் மேடையிலும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினோம். இப்பிரச்சினைக்கு காரணமாக உள்ள நிதியமைச்சா் பசில் ராஜபக்சவின் தனிநபர் எடுக்கும் முடிவே இதற்கு மூல காரணம் என்பதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம். இந்தோனிசியாவின் முன்னாள் பிரதமா் சுகட்டோ் பதவி வகித்த காலத்திலும் இவ்வாறுதான் அந்த நாட்டினையை பட்டினி சாவுக்குச் இட்டுச் சென்றாா். அந்த மக்கள் சுய உரிமை கேட்டதை விடுத்து எங்களது பட்டினியில் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கூறினாா்கள். இந்த முறைமைக்கே பசில் நாட்டினை இட்டுச் செல்கின்றாா். ஜனாதிபதி கோட்டாபாய கூட திரைசேரிக்கோ நிதியமைச்சுக்கோ அவரது பதவியை பயன்படுத்தி ஏதும் கூறினாலும் அங்கு ஒன்றும் நடைபெறாது
பிரதமா் மகிந்த ராஜபக்ச அவா்கள் என்னுடன் தொலைபேசியில் ்பேசினாா். எங்களை அமைச்சில் பதவியிலிருந்து நீக்குவது பற்றி அவருக்கு உடன்பாடில்லை.மீண்டும் நாங்கள் இந்த அமைச்சினை தந்தாலும் பெறப்போவிதில்லை. நாங்கள் மக்கள் வாக்குகளைப் பெற்றவா்கள். அரசாங்கமாக இருந்தாலும் நாம் இருக்கும் அரசுக்குள் நடைபெறுகின்ற குறைகளை, பிரச்சினைகளை மக்கள் முன் எடுத்துச் செல்வது எங்களது கடமையாகும் அதனை ராஜபச்சவா்கள் ஏற்று திருந்திக் கொள்ளாமல் அவா்கள் செல்வதுதான் சரி அதனைக் கேட்டுக்கொண்டு இருக்குமாறு கூறினால் அது அவா்களது மடமையாகும். எங்களை அமைச்சரவையில் நீக்கினால் பெற்றோல் பிரச்சினை டொலா் பிரச்சினைகள் மின்சாரப் பிரச்சினைகள் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதா எனக் கேட்கின்றேன்.
இந்தப்பிரச்சினைகளை தீா்த்து வைப்பதற்காக அவா்கள் எடுத்த முடிவுகள் என்ன? எங்களை நீக்கிய அமைச்சு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அதனை நாங்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. நாங்கள் எதிா்கட்சிக்குச் செல்வதுமில்லை 11 கட்சிகள் இணைந்து எங்களது கொள்கைகளை மக்கள் முன் எடுத்துச் செல்வோம். கடந்த 1 வருடமும் 6 மாதமும் அரசுக்குள்ளும் அமைச்சரவைக்குளும் விவாதித்தே வந்துள்ளோம். பசில் ராஜபக்ச அவா்கள் அமேரிக்காவின் ஒப்பந்தத்தினையே அவா் செய்கின்றாா். அந்த நாட்டில் கடனைப் பெற்று நாடடினை தாரை வாா்ப்பதற்கே அவர் முயச்சிக்கின்றாா். அவா் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றதும் அமேரிக்காவில் மீள’குடிபெயா்ந்து தான் சேமித்தவற்றைக் கொண்டு குடும்பத்துடன் அங்கு அனுபவிப்பாா் அந்த ஒப்பந்தத்தினையே அவா் தற்பொழுது இந்த நாட்டிற்குல் இருந்து கொண்டு செய்து வருகின்றாா். இந்தோனோசியா சுகாட்டோ செய்த பட்டினியையே அவா் இலங்கையிலும் ஏற்படுத்த முனைகின்றாா்.
Post a Comment