Header Ads



கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் உயர்ந்த எண்ணம் கொண்ட அமெரிக்கர்கள் ஜோ பைடனை இராஜினாமா செய்ய சொல்ல மாட்டார்கள்


1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார மந்த நிலை இதுவாகும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“உலகளாவிய பணவீக்கம் இன்று அதிகரித்து, எம்மைப் போன்ற சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றார்.

கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயர்ந்த எண்ணம் கொண்ட அமெரிக்கர்கள் ஜனாதிபதி ஜோ பைடனை இராஜினாமா செய்யுமாறு சொல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.