Header Ads



நாளை பாடசாலைகள் ஆரம்பம் - மாணவர்களை குழுக்களாக அழைப்பதற்கு தீர்மானம் (முழு விபரம் உள்ளே)


நாளை (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது

அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைவரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2021 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எஸ். எம். டி. தர்மசேன தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.