Header Ads



இஸ்லாமியர்கள் நிம்மதியாக நோன்பை நோற்க, பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிவிலக்கு - முஸ்லிம் எம்.பிக்களின் வேண்டுகோளை ஏற்ற பசில்


- நூருல் ஹுதா உமர் -

எதிர்வரும் புனித நோன்புகாலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீச்சம்பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பேரீச்சம்பழ இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வரியை நீக்குமாறு கோரி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலொன்று இன்று (24) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்குமிடையே இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்து பேரீச்சம்பழ இறக்குமதிக்கான வரியை நீக்கவேண்டிய தேவைகள் குறித்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு விளக்கினார். விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் திறைசேரி செயலாளருக்கு வரியை நீக்குவது தொடர்பில் பணிப்புரை விடுத்தார். மட்டுமின்றி புனித நோன்புகாலம் இஸ்லாமியர்கள் நிம்மதியாக நோன்பை நோற்க புனித நோன்புகாலம் முடியும்வரை இந்த வரிசலுகையை அமுலில் வைத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கு அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

1 comment:

  1. நாய்கள் முஸ்லிம்களுக்கு நோன்பு நோக்க உதவிசெய்ய வேண்டிய தேவை இல்லை. முழு உணவுப் பொருட்களின் விலையையும் பலமடங்காக அதிகரித்து பொதுமக்களின் மீது பயங்கர சுமையை சுமத்திவிட்டு பேரீத்தம் பழத்தின் வரியைக் குறைப்பதனால் எந்தப் பயனும் இல்லை.முதலில் உணவு பொருட்களின் விலையைக் குறை.

    ReplyDelete

Powered by Blogger.