அனைத்து வீதி விளக்குகளையும், அணைக்குமாறு நிதி அமைச்சர் கோரிக்கை
தற்போதைய மின் நெருக்கடி காரணமாக அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் தமது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு நிதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை இன்று (07) நிதியமைச்சர் அறிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
goodddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
ReplyDelete