பெண்களின் அடக்குமுறைக்கெதிராக ஆண்களும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது
இளைஞர்களைவிட அனேகமான இன்று யுவதிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவுகள் அதிகம் என்பதால் கூடுதலான வருமானங்களை பெற வேண்டும் என்பதற்காக எமது நாட்டிலுள்ள இளைஞர்கள் அரச துறையில் ஆர்வம் காட்டாமல் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்துறைகளில் நியமனம் பெற்று அரசஇ தனியார் துறைகளில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இதன் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் இம்சைகளால் எத்தனையோ பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு வெளியில் கூற முடியாமல் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இன்று எத்தனையோ குடும்பங்கள் விவாகரத்திற்காக நீதிமன்றங்களில் காத்து நிற்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் போதைப் பொருள் பாவனை என தரவுகள் கூறுகிறது. எனவே கணவனின் போதையினால்இ பேதைகளின் வாழ்வு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நிலைபேறான எதிர்காலத்திற்கு இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக பாடுபடுவோம்' எனும் தொனிப் பொருளிலான மகளிர் தின நிகழ்வில் செவ்வாய்க்கிழமை(8) இன்று தலைமைதாங்கி கருத்துரை வழங்கிய வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
Post a Comment