Header Ads



பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் துறைசார் டிப்ளோமா கற்கைகளுக்கான புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்


(அஸ்லம் எஸ்.மௌலானா)

பாகிஸ்தானில் உள்ள மிகப் பிரபல்யமான மருத்துவக் கல்லூரிகளில் இலங்கை மாணவர்கள் துறைசார் டிப்ளோமா கற்கைகளை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்தை College of Management and Technology (கொம்டெக்) அறிமுகப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் Al-Razi Medical Institute மற்றும் Afro Asian Medical Institute ஆகிய மருத்துவக் கல்லூரிகளுடன் கொம்டெக் நிறுவனம் இணைந்து இப்புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஒழுங்குகளை செய்துள்ளது.

ஜீ.சி.ஈ.உயர்தர விஞ்ஞானப் பிரிவில் குறைந்தது 02 பாடங்களில் சாதாரண சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள மேற்படி மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு வருட கற்கை நெறியான Diploma in Operation Theater Technician, Diploma in Radiography & Imaging Technician, Diploma in Medical Laboratory Technician, Diploma in Dispenser, Diploma in Physiotherapy ஆகிய பாட நெறிகளில் ஒன்றைத் தொடர்வதற்காக முழுமையான மற்றும் பகுதியளவான புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. இவ்வனைத்து பாடநெறிகளும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

இம்மருத்துவக் கல்லூரிகளில் மேற்படி டிப்ளோமா பாட நெறியொன்றை நிறைவு செய்த பின்னர் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கும் அந்நாடுகளில் தொழிவாய்ப்பை பெறுவதற்கும் மேற்படி நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பாகிஸ்தான் சென்று உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள், புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை 0778684242 எனும் வட்ஸப் இலக்கத்திற்கு தங்களது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது.

ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை பெறுபேறுகளுடன் நுண்ணறிவுப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் புலமைப்பரிசிலுக்கான மாணவர் தேர்வு இடம்பெறும் எனவும் விரைவில் பாகிஸ்தானிலுள்ள குறித்த மருத்துவக் கல்லூரிகளில் பாட நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் மேலும் அறிவிக்கப்படுகிறது.

இன, மத, பிரதேச வேறுபாடின்றி இலங்கையை சேர்ந்த மேற்படி கல்வித் தகைமையைக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு College of Management and Technology (கொம்டெக்) கேட்டுக்கொள்கிறது.

1 comment:

Powered by Blogger.