Header Ads



எந்தச் சூழ்நிலையிலும் பசில் நீக்கப்படமாட்டார் - பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு


எந்தச் சூழ்நிலையிலும் பசில் ராஜபக்ச அமைச்சரவை யிலிருந்து நீக்கப்பட மாட்டார் என பிரதமர் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இருவர் பசில் ராஜபக்ச நாட்டுக்கு தீமை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தெரிவித்திருப்பது ,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் நிதியமைச்சருக்கு எதிராக பிரச்சாரம் குறித்து ஐலண்ட் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய வேளையே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களை நியமிப்பதற்கான நீக்குவ தற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாகவே நிதியமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள பிரதமர் நிதியமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வர்கள் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

  1. அவரை நீக்குமாறு யாரும் கோரவில்லை. அமைச்சு பதவியில் வைத்தவாறே கொன்று விடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
    2 நாட்களின் பின்னர் ஜனாதிபதியையும் கருணைக்கொலை செய்யுமாறு கேட்கிறோம்.. அவர் ஒரு நோயாளி.

    ReplyDelete

Powered by Blogger.