Header Ads



வரிசையில் நிற்பவர்களிடம் மன்னிப்பு கேட்கும் ராஜாங்க அமைச்சர் - ஜனாதிபதியும், பிரதமரும் ஏமாற்றப்படுகிறார்கள் என்கிறார்


அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசையில் நிற்பவர்களுக்கும், உர தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமும் தான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாக இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார்.  

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நான் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் சிறந்தவர்கள் என எத்தனை நாட்களுக்குக் கூறிக்கொண்டிருக்க முடியும்? எத்தனை நாட்களுக்கு எஸ் சேர், எஸ் சேர் என்று எத்தனை நாட்களுக்குக் கூறிக்கொண்டிருப்பது எனவும் கேள்வி எழுப்பினார்.

நுகர்வோர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள் என அனைவரும் கவலையில் இருக்கிறார்கள். பலவந்தமாக இதனை செய்யுங்கள் என எவருக்கும் உத்தரவிட முடியாது. ஜனாதிபதிக்கு நாட்டு நிலைமைகள் தொடர்பில் சரியான தகவல்களை எவரும் கூறுவதில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டு நிலைமைகள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் வாய் திறக்க முடியாத நிலையே காணப்படுகிறது. அமைச்சர்கள் பேசும்போதே வாயை மூடிக்கொண்டு இரு என்கிறார்கள்.  ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கும் அமைச்சர்கள் நாட்டில் பிரச்சினை இல்லை  எனவும், கிராமங்களில் பிரச்சினை இல்லை. எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள் என்றார்.

இதனாலேயே 2015ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. ஆமாம் சேர் என்று கூறி ஜனாதிபதியை தவறாக வழிநடத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.