Header Ads



காது, கழுத்தில் உள்ள தங்க நகைகளை தாருங்கள் - பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அமைச்சரின் அறிவிப்பு இது


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டிற்காக உதவ வேண்டும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் போது நன்மை ஏற்படும் என்று இல்லை. பாதகமான நிலையில் மக்களும் உதவ முன்வர வேண்டும்.

கொரியாவில் பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த போது மக்கள் எப்படி உதவினார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.

வங்குரோத்து அடைந்த கொரிய நாட்டை மீட்டெடுக்க மக்கள் முன்வந்தார்கள். தமது காதுகளில் கழுத்துகளில் இருந்த தங்க நகைகளை வழங்கினார்கள் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதுபோன்றதொரு செயலை இலங்கை மக்களும் செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. We can give our jewellary to you. Can you give your wife to share?

    ReplyDelete
  2. நல்ல யோசனை உங்களை நம்பி வாக்களித்தவர்கள் வழங்குவார்கள். சரியாகச் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் வாக்களிக்காதவர்களிடம் பெறுவது ஞாயமில்லையே.

    ReplyDelete

Powered by Blogger.