Header Ads



நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுகிறது - இந்தியா திடுக்கிடும் குற்றச்சாட்டு


இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என தெரிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுவதாகவும்  இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்துக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை உடனடியாக செயற்படுத்துவதாக உறுதி வழங்கியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்நாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


2 comments:

  1. இந்திய வௌிநாட்டு அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கர் இலங்கை அரசாங்கத்தின் போக்கை மிகத் தௌிவாகக்கூறியிருக்கின்றார்,அதுதான் உ்ண்மை. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன கஷ்டமும் நஷ்டமும் வந்தாலும் அதுபற்றி எந்த அக்கறையும் இல்லாத இந்த அரசாங்கத்தை இந்த நாட்டுப் பொதுமக்கள் ஒன்றுகூடி விரட்டி அடித்து கடலில் வீசி எறிய வேண்டும்.

    ReplyDelete
  2. ஆடு நனைகிறது ஓநாய் ஊளையிடுகிறது

    ReplyDelete

Powered by Blogger.