Header Ads



ரஸ்யாவிற்கும், உக்ரைனுக்கும் தேயிலையை அனுப்புவது நிறுத்தம் - இலங்கை பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டு


ரஸ்யாவிற்கும், உக்ரைனுக்கும் தேயிலை ஏற்றுமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து கூடுதலாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் ரஸ்யா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் – ரஸ்ய போர் காரணமாக இவ்வாறு தேயிலை ஏற்றுமதியை இடைநிறுத்தியதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

போர் நிலைமையினால் குறித்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான பணத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், கப்பல் நிறுவனங்கள் அந்த நாடுகளுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேறு நாடு ஒன்றின் ஊடாக நிதி கொடுக்கல் வாங்கல்களை செய்ய முயற்சித்த போதிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகளினால் இந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது என ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டில் ரஸ்யாவிற்கு 27 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும், உக்ரைனுக்கு 4 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை உருவாகினால் அது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.