Header Ads



இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை 32,375 ஆகும்.

இந்தியாவிலிருந்து 29,514 சுற்றுலாப் பயணிகள், பிரித்தானியாவிலிருந்து 20,744 சுற்றுலாப் பயணிகளும் இந்தக் காலப்பகுதியில் இலங்கை வந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 204,345 ஆகவும், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 178,834 ஆகவும் காணப்பட்டது.

மார்ச் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் மட்டும் 25,511 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். 

No comments

Powered by Blogger.