Header Ads



மலேசியாவின் சர்வதேச பல்கலைக்கழக பீடாதிபதியாக, இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ரிஸ்கான் பஷீர் தெரிவு


யாழ்ப்பாத்தை பிறப்பிடமாகக் கொண்ட காலம்  சென்ற  யாழ் மாநகர சபையின் முன்னால் உதவி மேயர் எம்.ஜி பஷீர் மற்றும் காலம் சென்ற ஓய்வுப்பெற்ற ஆசிரியை சுல்பா பஷீர் ஆகியோரின் புதல்வன் கலாநிதி பஷீர் ரிஸ்கான் மலேசியாவில் அல்புஹாரி பல்கலைக்கழகத்தில் கணணி மற்றும் தொடர்பாடால் பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.n

இவர் ஆரம்பக்  கல்வியினை யாழ்ப்பாணம் பரியோவான்(St Jon's College) கல்லூரியில் கற்றதுடன் , பின்பு அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் கற்றார்.

இப்பதவியானது இலங்கையின் வடமாகாணத்திலிருந்து சர்வதேச பல்கலைகழகமொன்றில் முதல் முறையாக  ஒரு பீடத்தின் பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதென்பது  குறிப்பிடத்தக்கது.

இவர் இளநிலை பட்டத்தை கணணித்துறையிலும் , முதுமானி பட்டத்தை கல்வித்துறையிலும்,மற்றும் கலாநிதி பட்டத்தை கணணித்துறையிலும் முடித்து பிறகு இலங்கையின் தர்கா நகர் , மற்றும் மகாவலி கல்வியல் கல்லூரிகளில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் கடமையாற்றியதுடன் , இறுதியாக சீனா தீரி ஜோர்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியராக  கடமையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது 🇲🇾 மலேசியா அல்புஹாரி சர்வதேச பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.