டீசல் கிடைக்காவிட்டால் நிலமை மேலும் மோசமடையும், தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
எரிபொருள் நிலையங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பஸ்களுக்கு தேவையான டீசல் கிடைக்கப் பெறவில்லையாயின், நிலைமை மேலும் மோசமடையும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் தெரிவித்துள்ளார். நேற்று எந்தவொரு எரிபொருள் நிலையத்திலும் டீசல் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் இன்று பெரும்பாலான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை.
எரிபொருள் விநியோகத்தின் போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு முன்னதாகவே கோரியிருந்தோம்.
எனினும், அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு, அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment