Header Ads



போதுமான பேரீச்சம்பழம் இல்லை, பேரீச்சம்பழம் இல்லாமல் நோன்பு துறக்கும் நிலைமை


நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் பேரீச்சம்பழமும் உள்ளடங்குவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி Hiru செய்தி சேவைக்கு தெரிவித்தார். 

இதன்படி, நாட்டில் தற்போது பேரீச்சம்பழத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுகளுக்கு அமைய நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் மூன்று பேரீச்சம் பழங்களை உணவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தநிலையில் இஸ்லாமிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 40 மெட்ரிக் டன் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சு தெரிவிக்கின்றது. 

எனினும் நோன்பு காலத்திற்கு போதுமான பேரீச்சம்பழம் இல்லை என பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

2 comments:

  1. ஆட்சியாளர்களின் அடிவருடிகளான முஸ்லிம கலாசார அமைச்சினை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் பணிப்பாளர்கள் சவூதியிலிருந்து முஸ்லிம்களுககு நோன்பு திறக்க இலவசமாக அனுப்பிவைக்கப்படும் ஈச்சம்பழத்தை மெதமுலானைக்கு பங்குவைக்க இப்போதே தயாராக இருப்பார்கள்.அப்போது தான் அடுத்தவருடத்துக்கும் கதிரையில் அமரலாம்.

    ReplyDelete
  2. Dates is not a must for breakfast. It is just a tradition because Prophet PBUH used dates to break his fast. He did it as there were no other fruits available in Saudi at that time. SL Muslims must not make too much fuss about shortage of dates. They have so many other problems to worry about.

    ReplyDelete

Powered by Blogger.