Header Ads



ஜனாதிபதியை விமர்சித்தவருக்கு ஏற்பட்ட நிலைமை


அரச தலைவரை விமர்சிக்கும் சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் பணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இடைநிறுத்தியுள்ளது. பரமி நிலேபனா ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சிக்கும் பதிவொன்றை தனது தனிப்பட்ட முகநூலில் பகிர்ந்ததற்காக தொலைக்காட்சி தொகுப்பாளினியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இடைநீக்கம் செய்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரச தலைவர் குறித்த பதிவே தன்னை பணியிலிருந்து இடைநிறுத்த காரணம் என பரமி நிலேபனா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொலைக்காட்சி தொகுப்பாளரின் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், பரமி நிலேபனா ரணசிங்கவை பணி இடைநிறுத்தம் செய்ய SLRC எடுத்த தீர்மானத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட இயக்கம், இது கருத்து சுதந்திரம் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இது இலங்கையில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அப்பட்டமான முயற்சி என தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.