Header Ads



ரணிலின் கிடுக்குப்பிடி - சிக்கிவிட்டு அடியோடு, மறுத்தார் பசில்


ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (23) நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் சுவாரஸ்யமான வாக்குவாதம் இடம்பெற்றது.

முன்னதாக கருத்துரைத்த ரணில், சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் வினவினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பசில், அவர்கள் இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றார். குறிக்கிட்ட ரணில், அப்படியாயின் எந்த ஆவணத்தின் அடிப்படையில் பேச்சுநடத்துகின்றீர்கள். ஜனாதிபதி அவர்களே! நாணய நிதியத்தின் அதிகாரிகள் இருந்தால் இவ்விடத்துக்கு அழையுங்கள் எனக் கேட்டார்.

பதிலளித்த பசில், என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். முதலில் எங்களுக்கு அறிக்கையை சமர்பிக்கமாட்டார்கள் ஒரு வரைபைதான் தருவார்கள் என்றார்.

குறுகிட்ட ரணில், அறிக்கை இல்லையென்கின்றீர்கள் தற்போது வரைபு கிடைத்துள்ளது என்கின்றீர்கள். அப்படியாயின் அதனை தாருங்கள் என்றார்.

பதிலளித்த பசில், அறிக்கை உங்களுக்கு வேண்டுமா? வரைபு உங்களுக்கு வேண்டுமா? எனக்கேட்டார்.

எனினும், அறிக்கையோ, வரைபோ எனக்கு வேண்டாம். அதனை பாராளுமன்றத்தில் ஆற்றுப்படுத்துங்கள் என ரணில் கேட்க, அதற்கு மறுப்புத்தெரிவித்த பசில் ராஜபக்ஷ, அதனை தன்னால் சமர்பிக்க முடியாது எனக்கூறிவிட்டார்.

No comments

Powered by Blogger.