இன்றுமுதல் மின்வெட்டு இருக்காது அல்லது குறைவாக இருக்கும்
இன்று (05) முதல் எரிபொருள் கையிருப்பின் அடிப்படையில் மின்வெட்டு இருக்காது அல்லது குறைவாக இருக்கும் என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (05) முதல் மின்வெட்டை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினத்திற்காக (05) நேற்று வெளியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கு அமைய,
P,Q,R,S,T,U,V,W :
- மு.ப. 8.30 முதல் பி.ப. 5.30 மணி வரை 3 மணித்தியாலங்கள்
- பி.ப. 6 முதல் இரவு 10 மணி வரை 1 மணித்தியாலம்
E,F :
- மு.ப. 8.30 முதல் பி.ப. 4.30 மணி வரை 4 மணித்தியாலங்கள்
- பி.ப. 4.30 முதல் இரவு 10.30 மணி வரை 3 மணித்தியாலங்கள்
திட்டமிட்ட மின்வெட்டை அமுல்படுத்துவதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment