Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் கொலையாளி யார் என்பது எனக்கு தெரியும், நான் கைது செய்யப்படலாம் - ஹரின்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் கொலையாளிகள் யார் என்பது தனக்கு தெரியும் எனவும் அதனை வெளியில் கூறினால், தான் கைது செய்யப்படுவேன் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தான் மாத்திரமல்ல, முழு நாட்டு மக்கள் கூட யார் கொலையாளிகள் என்பதை அறிவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். ஜா-எலயில் நேற்று (28) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் மின்சாரம் இல்லை. இப்படியும் நாடு. 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாடு துரதிஷ்டத்திற்கு உள்ளானது. அதற்கு காரணம் என்ன?. தேவாலயத்திற்கு சென்று ஜெபம் செய்துக்கொண்டிருந்த மக்களை கொலை செய்தனர். இதனை நான் நிரூபித்து கொண்டு வந்தேன்.

இது தொடர்பான தொலைக்காட்சி ஒன்றில் நாங்கள் விவாதம் ஒன்றில் கலந்துக்கொண்டோம். நாங்கள் சரியாக வாதங்களை முன்வைக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அதனை அறிவின் மூலம் செய்தோம்.

வாயாலும் வார்த்தைகளாலும் கூறியிருந்தால், விவாதத்தில் கலந்துக்கொண்ட எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் ஒருவர் கொலைக்கார அரசாங்கத்தில் யார் கொலையாளி என கேட்டிருப்பார். கொலையாளி யார் என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

நான் கொலையாளி இவர் தான் என கூறியிருந்தால், வெளியில் செல்லும் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள்.

அண்மையில் நான் நாடாளுமன்றத்திற்கு மின் பந்தம் ஒன்றை எடுத்துச் சென்றேன். முதல் நாள் இரவு ஏதாவது செய் என்று சஜித் பிரேமதாச கூறியிருந்தார். என்ன செய்வது என்று நான் இரவில் யோசித்தேன்.

அக்காவின் மகள் சிறிய மின் பந்தத்தை வைத்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்தேன். நான் கடைக்கு சென்று 100 ரூபாய் பெறுமதியான 50 மின் பந்தங்களை கொள்வனவு செய்தேன்.

நான் அதனை பொதி செய்து நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றேன். மற்றுமொரு நேரத்தில் நாங்கள் அதனை காண்பிக்கவிருந்தோம். அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் எழுந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொதியை ஒன்றை கொண்டு வந்திருப்பதாக கூறினார். அதில் வெடி குண்டுகள் இருக்கலாம் என கூறினார்.

அப்போது நான் என்ன பைத்தியமா எனக் கூறி, நான் மின் பந்தத்தை கொண்டு வந்துள்ளேன். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால், கழிவறைக்கு செல்ல அதனை கொண்டு வந்தேன் என தெரிவித்தேன். அது தவறா?.

நான் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக ஜெனிவாவுக்கு செல்லவிருக்கின்றேன். நான், நாளைய தினம் விமான நிலையத்திற்கு செல்லும் போது என்னை கைது செய்யலாம் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.