நீர்கொழும்பு பிராந்திய ஊடகவியலாலர் ஷாஜஹான், தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
செய்தி சேகரிக்கச் சென்ற சிரச, பிராந்திய ஊடகவியலாலர் நீர்கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளரும் மகனும் கைது.
நீர்கொழும்பு பிரதேச சிரச,சக்தி,வீரகேசரி பிராந்திய ஊடகவியலாலர் எம்.இசட். ஷாஜஹானே தாக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக ஷாஜஹான் விபரிக்கையில்
எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இன்றைய நிலயில்
அது தடர்பான செய்தியை அனுப்புமாறு தான் கடமைசெய்யும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து கிடைத்த உத்தரவுக்கமைய 1 ம் திகதி இரவு 8.30 மணியளவில் நீர்கொழும்பு, தழுபத்தையில்உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்றேன். அப்போது பெட்ரல், டீசல் இல்லையென அறிவிப்பு போடப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.
எனது கையடக்க தொலைபேசி ஊடாக அதனை வீடியோ எடுக்கும் போது அங்கு வந்த உரிமையாளரும் மேலும் சிலரும் சேர்ந்து என்னை தாக்கி எனது போனையும், அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையையும் பறித்தெடுத்தனர். இது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது அதனை தாருங்கள் எனக் கேட்டபோதும் தரவில்லை.
நான் நேரடியாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்து விட்டு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகமவின் ஆலோசனைக்கினங்க விசாரண நடாத்திய நீர்கொழும்பு பொலிஸார் எரிபொருள் நிலைய உரிமையாளரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளனர். இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தேடுகின்றனர்.
Post a Comment