Header Ads



ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து 8 மாதங்களுக்குரிய எரிபொருளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்


2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து விலைமுறி கோரப்பட்டுள்ளது. 

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த நீண்டகால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.