Header Ads



7 மூளையாலோ நீண்ட அரசியல் அனுபவத்தாலோ தற்போது பயன் இல்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது


(JM. Hafeez)  

தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியா விட்டால் அதனை கைவிட்டு செல்ல வேண்டும். தவறான தகவல்களை வழங்கி தமது இயலாமையை மறைக்க முற்படக்கூடாது என்று ஜே.வீ.பின் அரநசியல் உயர் பீட உறுப்பினர் கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.(15)

கலகெதரைப் பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கயைில்-

தற்போதைய அரசை விரட்டியடிக்கும் நிலைக்கு நாட்டு மக்கள் முன் வந்துள்ளனர். ஒருநாள் அல்ல பல நாற்கள் எரிபொருளுக்காக வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. எதை எடுத்தாலும் தட்டுப்பாடும்  விலையேற்றமும் காணப்படுகிறது. தமு பொறுப்பை சரியாக நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவாக இது உள்ளது. 

தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியா விட்டால் அதனை கைவிட்டு வீடு செல்ல வேண்டும். தவறான தகவல்களை வழங்கி தமது இயலாமையை மறைக்க முற்படக்கூடாது.  நாம் அரசுக்கு நாட்டலை் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை பற்றிய  தகவல்களை தெரிவிக்கவே பாதைக்க இறங்கி உள்ளோம். இவ்வாறு பல போராட்டங்களைச் செய்ய உள்ளோம். 

தற்போதைய ஆட்சிக்கு கட்சி ஆதரவாளர்கள் என்று யாரும் தற்போது இல்லை.

தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் வலிமை குன்றியது. எனவே அமைப்பு ரீதியாக ஒரு தரைமையுடன் மேற்கெனாண்டால் அதனை நலிவடையச் செய்ய முடியாது.

மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு எதையும் முறையாகச் செய்ய முடியாது என்பது தெரிகிறது.

ஏழு மூளையாலோ நீண்ட அரசியல் அனுபவத்தாலோ தற்போது பயன் இல்லை அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது. மக்கள் கேட்பது விலை குறைப்பு அல்ல. துன்பத்தில்ஆழ்த்தும் அரசை வீட்டு அனுப்புவதே மக்களது நோக்கமாகும்..

தேசிய அரசாலோ அல்லது சர்வகட்சியாலே ஏதும் நடக்கப் போவதில்லை. ஏற்கனவே நாட்டை சீரழித்தவர்கள்தான் மீண்டும் அதில் இடம் பெறுகின்றனர்.

எனவே சரியான மாற்று வழி எது என்பதை தேசிய மக்கள் சக்தி தெளிவு படுத்தி வருகிறது. அதற்கான ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்து வருகிறது.

நாட்டில் பொருளாதார வீழ்ச்சி இல்லை என அரசு பொய் அறிக்கைகளை விடுகிறது. அரசு பாராளுமன்றில் உண்மையைக் கூற வேண்டும். 

உலகில் பல நாடுகள் தற்போது அபிவிருத்தி அடைந்த போதும் நமது நாடு வீழ்ச்சி அடைந்து செல்கிறது என்றார்.


No comments

Powered by Blogger.