Header Ads



எரிபொருள், எரிவாயு பெற வரிசையில் நிற்பது முடிவுக்கு 7 மாதங்களாகும் - அரசாங்கம் திணறுவதாக அமைச்சர் லொகுகே தெரிவிப்பு


எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவர குறைந்தது இன்னும் ஏழு மாதங்களாகும் என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, உலக அரங்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது என்று தெரிவித்தார்.

உலகளாவிய பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாடுக்கு டொலர்களை கொண்டு வருவதற்கு தேங்காய்களை விற்க முடியாது எனவும் டொலர்களை கொண்டு வருவதிலுள்ள சிரமத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

எனவே, சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதியை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்றார்.

தற்போதைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு அரசாங்கத்துக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மாதங்கள் எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

Powered by Blogger.