Header Ads



அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி பிரச்சினையைத் தீர்க்க முடியாது, 6 மாதங்களாவது பசில் ராஜபக்ச விலக வேண்டும்


அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மகா சங்கத்தினர் தயாராக இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் மகாசபையில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை சாலையில் மக்கள் ஆரவாரம் செய்தும், மேளம் அடித்தும், பால் சாதம் சமைத்தும் ஆரவாரம் செய்தனர்.

மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தனர்? நாடு முழுவதும் உள்ள சுவர்களில் ஓவியங்களை வரைந்து இளைஞர்கள் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மகாசங்கத்தினர் முன்வந்து நல்லதொரு தலைவரை நியமித்ததில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் இன்று அந்த மகிழ்ச்சி இன்றைக்கு முற்றிலும் போய்விட்டது. இந்த அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் கடுமையாக உழைத்தோம். நாங்கள் ஆட்சியாளர்களை தர்மத்தில் உபதேசித்தோம். ஆனால், நாளுக்கு நாள் குறைகள் அதிகரித்து, முன்னெப்போதும் இல்லாத பேரழிவிற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

கோவிட் பேரழிவு, டொலலர் பற்றாக்குறையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. விவசாயிகள் வீதிக்கு வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று இவை அனைத்தும் ஒரேயடியாக நடந்து முடிந்து விட்டது.

மற்ற நாட்களில் பொருட்களின் விலை 5 -10 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகிறது. இன்று பொருட்களின் விலை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எரிவாயு - மின்சாரம் இல்லை. இந்நிலையில், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள்.

எனினும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இதேவேளை, பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்ற பின்னர் இருந்தவை இல்லாமல் போய்விட்டன என இன்று பலரும் கூறுவதை தயக்கத்துடன் கூற வேண்டியுள்ளது.

அது உண்மையா பொய்யா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில், மக்களின் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட முடியுமானால் குறைந்தது 6 மாதங்களாவது பசில் ராஜபக்ச விலகி இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Arasan anru kollum iraivan ninru kolluwan unakkellam idu enge vilankum Ina veri piditta naikale

    ReplyDelete

Powered by Blogger.