Header Ads



தனியொருவர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது, 69 இலட்சம் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளார்கள்


தேசத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயாமல் தனியொரு நபர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்ற விடயம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை மூலம்  நாட்டிற்கு கிடைத்த 15 பில்லியன் அமெரிக்க டொலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் கடந்த இரண்டு வருட கொவிட் காரணமாகவும்  இல்லாமல்போயுள்ளது என அவர்  தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது என தெரிவித்துள்ள அவர் கொவிட் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கையிருப்பில் இருந்த டொலர்கள் செலவு செய்யப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை குற்றம்சாட்டும் அனேகமானவர்கள்  நாட்டின் நெருக்கடியின் பின்னால் உள்ள உண்மை கதையை அறிந்துகொள்ளாதவர்கள் என்பதை பார்க்க முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதன் காரணமாக தற்போதைய விவகாரம் மேலும் குழப்பகரமானதாக மாறியுள்ளது, எனவும் தெரிவித்துள்ள ஞானசார தேரர் தனியொரு நபர் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது என சில குழுக்கள் தெரிவிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபரை துரத்தியடித்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சரிசெய்யலாம் என ஏனைய குழுக்கள் தெரிவிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை தனியொரு நபர் தொடர்பானதில்லை அவரை குற்றம்சாட்டுவது அபத்தமானது, என தெரிவித்துள்ள ஞானசார தேரர்  6.9 மில்லியன் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வழங்கினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. நிற்காத வயிற்றுப் போக்கு போல.

    ReplyDelete
  2. Why do you publish this rowdy monk's news on your website?

    ReplyDelete
  3. Mottai Muthevi, your game is over, india already entered. 😆😆😆

    ReplyDelete

Powered by Blogger.