5 கோரிக்கைகளை முன்வைத்து நீர்கொழும்பு மீனவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
- Ismathul Rahuman -
மீனவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கத்தோலிக்க பிதாக்களின் தலைமையில் வீதியை மறித்து மாபெறும் ஆர்பாட்டப் பெரனியை நடாத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 3ம் திகதி காலை 9 மணிக்கு நீர்கொழும்பு கடற்கரை தெரு சாந்த செபஸ்தியன் தேவஸ்தானம்
மற்றும் பிடிப்பன மீன் விற்பனை நிலையம் என்பற்றிற்கு அருகில் ஒன்று கூடிய மீனவர்கள் கத்தோலிக்க பங்குத் தந்தைகளின் தலைமையில் பேரனியாக சுலோகங்களை கோஷித்துக்கொண்டு நீர்கொழும்பு தெல்வத்த சந்தியை வந்தடைந்தனர்.
நீர்கொழும்பு வலய கத்தோலிக்க சபையுடன் இனைந்துள்ள நீர்கொழும்பு மீனவ மாவட்ட ஒன்றியம் ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டத்தில் இப் பிரதேசத்தின் 82 மீனவ சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆண்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்களும்நீர்கொழும்பு பிரதேச தேவஸ்தானங்களின் பங்குத் தந்தைகள் கத்தோலிக்க பிதாக்கள் கன்னியஸ்திரிகள் இதில் கலந்துகொண்டனர்.
தெல்வத்த சந்தியிலிருந்து மீண்டும் கொழும்பு புத்தளம் வீதியின் புகையிரத கடவை சந்தியை நோக்கி பேரனியாகச் சென்று புகையிரத வீதியையும் புத்தளம் கொழும்பு பிரதான வீதியையும் மறித்து போக்குவரத்து தடையை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகணங்களை மாற்று வழியில் அனுப்புவதற்கு பொலிஸாருக்கு ஏற்பட்டன. இவ்ஆர்ப்பாட்டத்தினால் நீர்கொழும்பின் பல வீதிகளிலும் வாகண நெறிசல்கள் உண்டாகின.
எரிபொருள் விலை ஏறியுள்ளதுடன் அதனை கட்டுப்படுத்தும் தீர்வோ நிவரனம் வழங்கவோ அரசு நடவடிக்கை எடுக்காமை.
மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றமும் அதன் பராமறிப்புச் செலவுகள் மேலும் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாமல் போனமை.
நீர்கொழும்பு மீனவ மாவட்டத்தில் மீன்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள திக்கோவிட்ட முதல் பிடிப்பன வரையான கடலோரத்தில் ஆழ்கடலில் பலவந்தமாக தான்தோண்டித்தனமாக மணல் அகழ்ந்து துறைமுகத்தின் கிழக்கு,மேற்கு ஜெட்டியை நிரப்ப மணல் பம் பன்னுவதற்காக நஷ்டஈடு கொடுக்காமை.
எக்ஸ்பிரஸ் பேல் கப்பல் எறிந்து நாசமானதினால் எமது கடல் சுற்றாடல் மாசடைந்து மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய நேரத்திற்கு சாதாரண ந்ஷ்டஈடு தரப்படாமை.
நீர்கொழும்பு களப்பு மற்றும் முத்துராஜவெல பிரதேசத்தின் சில கிராம உத்தியோகத்தர்கள் பிரிவை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்காமை ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே இந்த மாபெறும் பேரனியும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
வைராற சோறு கொஞ்சம் இல்லை.
சமைப்பதற்கு கேஸ் இல்லை.
வீட்டில் இருக்க லைட் இல்லை.
கடலுக்குச் செல்ல எண்ணெய் இல்லை.
எமது பிள்ளைகள் பட்டினியில்.
கப்பல் வரவழைத்து தீபற்றியது.
எமது கடலை சாவடித்தனர்.
வைய்றில் அடித்து மீனவர்களை நஷ்டஈட்டிற்கு மண் கூட்டினர்.
அரசாங்கம் தூக்கத்தில். பேர்ல் கப்பல் தீயில
யார் சுபம் அனுபவித்தர்.
எமது நிலத்தை சுவீகரிக்க கஸட் அடித்தது ஏன் நந்தே.
இன்னும் றிவஸ் பன்னவில்லையா.
கேட்டதுதானே எமது சத்தம். போன்ற சுலோகங்களை கோஷமிட்டனர்.
ஆர்பாட்டக்காரர்கள் மீண்டும் தெல்வத்த சந்தியை நோக்கி திரும்பி வந்து அங்கு ஒன்று கூடினர்.
அங்கு கத்தோலிக்க சபையின் நீர்கொழும்பு வலய மீனவ பணிப்பாளர் அருத் தந்தை சுஜீவ அத்துகோரல உரையாற்றும் போது நாம் 9 மணி முதல் 1 மணி வரையே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்தோம். எமது செய்தி ஊடகங்கள் மூலம் முழு உலகிற்கும்
சென்றுவிட்டன. கடற்றொழில் இராஜாங்க அமைச்சரும் இன்னுமொரு அமைச்சரும் எம்முடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒரு வார காலத்திற்குள் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கித்தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
நாம் ஏற்கனவே மஹஜர் ஒன்றும் அனுப்பிவைத்துள்ளோம்.
இங்கு நீர்கொழுப்பின் பிடிபன்ன, முன்னக்கர ,செத்தப்பாடு, துங்கல்பிட்டிய,
தூவ, குடாபாடு,கடற்கரை தெரு,கம்மல்தொட்ட,பள்ளன்சேனை ஆகிய கிராமங்களிலிருந்தும் கலந்துகொண்டுள்ளதுடன் சிலாபம் பத்தல்குண்டு, கற்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து ஆதரவு தெரிவித்து வருகை வந்துள்ளனர். எமது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இதனை திசைதிருப்ப சிலர் வந்திருந்ததை நாம் அவதானித்தோம். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது போராட்டம் வெற்றிபெறும் வரை தொடரும் என்றார்.
1 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்த
சென்றனர்.
பாதுகாப்பிற்காக கலகம் தடுக்கும் பொலிஸாரும், நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment