Header Ads



54 வருடங்களின் பின்னர் இரத்மலானை விமான நிலையத்தினூடாக சர்வதேச சேவைகள் மீள ஆரம்பம் (படங்கள்)


இரத்மலானை விமான நிலையத்தினூடாக இன்று முதல் சர்வதேச விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் மீளவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்கான நிகழ்வு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. 

இதேவேளை, இரத்மலானை விமான நிலையத்தின் திறன் மற்றும் ஓடுபாதை செயற்திறன் என்பன சுமார் 75 சதவீதம் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விமான நிலையத்தில் புதிய விமானக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.