Header Ads



உணவுப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி


உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மின்சார துண்டிப்பும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார். 

இதேவேளை, அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுகளே இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். பருப்பு மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளை விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்கின்றது. 

வெளிநாட்டு கையிருப்பு இன்மையால் இவ்வாறு தொடர்ந்தும் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


No comments

Powered by Blogger.