Header Ads



இன்றுமுதல் கொவிட் ஜனாஸாக்களை நாடு முழுவதும் நல்லடக்கம் செய்யலாம் - இதுவரை 3,634 உடல்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம்


கொரோனா தொற்றினால் மரணித்த நபர்களை நல்லடக்கம் செய்து வந்த ஓட்டமாவடி - மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார். 

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை மார்ச் 5 முதல் எந்தவொரு மையவாடிகளிலும் அடக்கலாம் எனும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின் படி, ஓட்டமாவடி மஜ்மா நகரில் மேற்கொள்ளப்பட்டு வந்த நல்லடக்கப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன. 

ஓட்டமாவடி - மஜ்மா நகர் மையவாடியில் 2021 மார்ச் 5 முதல் 2022 மார்ச் 5 வரையான ஒரு வருடத்தில்  3,634 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதில், அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களின் உடல்களும் அடங்குகின்றன.

ஜனாஸா நல்லடக்கப் பணியை எமது பிரதேச சபை மேற்கொள்வதற்கு இதுவரை காலமும் சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவிக்கிறேன் என்று தவிசாளர் தெரிவித்தார்.

எச்.எம்.எம்.பர்ஸான்


No comments

Powered by Blogger.