Header Ads



ஓமான் அரசினால் இலங்கைக்கு கடனுதவியாக, வழங்கிய 3,500 மெற்றிக்தொன் எரிவாயு இறக்கப்பட்டது


ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயு, இன்று (27) பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனத்திடம் போதியளவு எரிவாயு கையிருப்பு இருப்பதால், நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்கள் வீதம் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கெரவலப்பிட்டி எரிவாயு முனையத்தில் உற்பத்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாதாரணமாக இல்லாவிட்டாலும், பிற்பகலுக்குள் சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

எரிவாயுவைத் தொடர்ந்து விநியோகம் செய்வதன் மூலம் இந்த சர்ச்சையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர லிட்ரோ திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. முஸ்லிம்களின் எண்ணெயும் எரிவாயும் இல்லாது இந்த நாடு இயங்கமாட்டாது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். எங்கே அந்த இனத்துவேசம் கொண்ட ஆட்சியைக் கட்டியாழும் துவேசிகள். அவர்களுக்கு இதனை பலதடவைகள் காதில் ஊதவே்ணடும்.

    ReplyDelete

Powered by Blogger.