Header Ads



தீ பிடித்த நியூ டயமன்ட் கப்பல் நிறுவனம் 3,480 மில்லியன் பணத்தை, இலங்கைக்கு செலுத்தவில்லை என தெரிவிப்பு


அனர்த்தத்திற்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலிடம் இருந்து இதுவரையில் வழங்கப்படாத 3 ஆயிரத்து 480 மில்லியன் ரூபாவை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அறவுறுத்தியுள்ளது.

கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2020 செப்டம்பர் மாதம் நாட்டின் தென்கிழக்கு கடலில் குறித்த கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானது.

இந்த விடயம் தொடர்பில் 12 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் கடற்சூழல் மாசடைதலை தடுக்கும் சட்டத்தின் கீழ் மதிப்பிடப்பட்ட 3 ஆயிரத்து 480 மில்லியன் ரூபா இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கும் இரசாயன பதார்த்தத்தை தெளிப்பதற்கும் மாத்திரம் 51.3 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தநிலையில் சட்டமா அதிபருடன் இணைந்து தாமதமடைந்துள்ள நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தொகையை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு வலியுறுத்தியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.