Header Ads



கொள்ளையிடுவதற்காக கொலைகள் அதிகரிப்பு - நேற்று மாத்திரம் 2 சம்பவங்கள்


நாட்டில் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்களுக்காக இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று காலை வந்த இருவர் வீட்டினுள் இருந்த பெண்ணை கட்டி வைத்து கணவனை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மாலபே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

80 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, நேற்று (16) காலை சீதுவை, முகலங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. உயிர் வாழ கொலையும், கொள்ளையும் அவசியமாகிவிட்ட காலம். பொறுப்புதாரிகளினதும், சொத்துக்குவியல்கள் வைத்திருப்போரினதும் மனம் விசாலமடைந்தால் கொலை, கொள்ளை சராசரி வேகத்தில் செல்லும் இல்லையென்றால் உச்சத்தைத் தொடும்.

    ReplyDelete

Powered by Blogger.