Header Ads



ரூபவாஹினியின் வருமானம் வீழ்ந்தது - அத்தியாவசிய செலவுக்காக 240 மில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கேட்கிறது


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சம்பளம் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்காக 240 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான செலவுகளை ஈடுகட்ட பணம் கோரப்பட்டுள்ளது.

மேலும் கூட்டுத்தாபனத்தின் வருமானம் குறைந்துள்ளதால் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு போதிய வருவாய் இல்லை என கூட்டுத்தாபனம் திறைசேரிக்கு தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது அதன் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி சுமார் 65 மில்லியன் ரூபாவாகும்.

கூட்டுத்தாபனத்தில் 900 பேர் பணிபுரிவதுடன், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மட்டும் மாதம் 90 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

இத்தகவலை சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.