Header Ads



நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை கூட்டும் ஜனாதிபதி - சகல கட்சிகளுக்கும் அழைப்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் சர்வகட்சி மாநாடு தொடர்பான யோசனையும் ஒன்று.

நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வகட்சி மாநாட்டை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்பிரகாரமே சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 comment:

  1. அடுத்தவர்களின் தலையில் சரக்கையும் சுமையையும் ஏற்றும் சூழ்ச்சிக்குப் பெயர் சர்வகட்சி மாநாடு.

    ReplyDelete

Powered by Blogger.