Header Ads



வனவாசி ராகுல தேரரின் தைரியத்தினால் பாதுகாக்கப்படும் 2000 ஏக்கர் நாமல் உயன தேசிய பூங்கா (வீடியோ)


தேசிய நாமல் உயன 31வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேசிய நாமல் உயன சர்வதேச சுற்றாடல் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு 18.03.2022 அன்று நடைபெற்றுள்ளது.

நாமல் தேசிய பூங்கா 2000 ஏக்கரலான இந்த நிலப்பரப்பில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் அனுராதபுர காலத்தின் பல பழங்கால இடிபாடுகள் காணப்படுகின்றன. நான்காம் தப்புல மன்னன் காலத்தில் இந்த நா உயன மக்களின் புகலிடமாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் தேசிய மரமான நாக மரம் தவிர, சுமார் 18 வகையான பறவைகள் மற்றும் 72 மருத்துவ தாவரங்கள் உள்ளன.


தேசிய நாமல் உயன சர்வதேச சுற்றாடல் அமைப்பின் உறுப்புரிமையை தேசிய நாமல் உயன நிறுவனர் வனவாசி ராகுல தேரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பின் புதிய இணையதளத்தை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

சுற்றாடல் அமைப்பின் செயற்பாட்டு உறுப்புரிமை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும், வாழ்நாள் உறுப்புரிமை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.