2 வருடத்திற்கு சலுகை அடிப்படையில் எண்ணெய் - 3 முஸ்லிம் நாடுகள் வாக்குறுதியளித்ததாக சஜித் கூறுகிறார்
வீழ்ச்சியடைந்த இந்நாட்டை, மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான தனக்கு முடியும் எனவும், நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான திறமை தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இரண்டு வருட காலத்திற்கு சலுகை அடிப்படையில் எண்ணெய் பெறுவதற்கு மூன்று மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதற்கு குறித்த மூன்று நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் தற்போதைய ஆட்சியில் அவ்வாறான உதவிகளை வழங்குவதற்கு அந்நாடுகள் தயக்கம் காட்டுகின்றன எனவும் தெரிவித்தார்.
நாடு வீழ்ச்சியடைந்துள்ள கடுமையான நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறிய அவர்,ஊழல்,மோசடிகள் மற்றும் அடக்குமுறைகள் இன்றி அதற்கான உண்மையான அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
Project Leopard வேலைத்திட்டத்தின் கீழ் "உலக வனஜீவராசிகள் தினத்தை" முன்னிட்டு யால நலன்புரி மற்றும் ஒத்துழைப்புச் சங்கத்திற்கு 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் இன்று (03) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment