Header Ads



உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 150 டொலராகலாம் - பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு, வறுமை கடுமையாக உயர்வு


யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பும் அதன் விளைவாக ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும், போர் தொடங்கும் முன் யுக்ரைன் கோரிய 1.4 மில்லியன் டொலர் கடனுக்கு அடுத்த வாரம் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உலக எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் ஏற்கனவே உலகில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதம் மிகப் பெரியது.

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள ஸ்விஃப்ட் நாணய பரிமாற்றத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகள் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது

இதேவேளை, போர் காரணமாக ஏற்கனவே உலக சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 டொலர்களை நெருங்கியுள்ள நிலையில், விரைவில் அது 150 டொலர்களாக உயரும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.