Header Ads



ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: 141 நாடுகள் ஆதரவு - இலங்கை, பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் புறக்கணிப்பு


யுக்ரேன் மீதான ரஷ்யா பலப்பிரயோகம் செய்வதை நிறுத்து விட்டு அங்குள்ள தமது ராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 193 உறுப்பு நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாகவும் ரஷ்யா, சிரியா, பெலாரூஸ், வட கொரியா, எரிட்ரீயா ஆகிய ஐந்து நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தன.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 35 நாடுகள் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு இல்லாவிட்டாலும், இது சம்பந்தப்பட்ட நாடு மீது உலக அளவிலான அரசியல் அழுத்தத்தைத் தரும்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில்தான் யுக்ரேனின் கெர்சன் துறைமுகத்தில் ரஷ்ய படையினர் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணை, குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். மரியூபோல் நகரில் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையால் அழைக்கப்பட்ட ஒரு அரிய அவசரகால அமர்வு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செயல்பாட்டுடன் முடிவுக்கு வந்தது.

1 comment:

  1. இலங்கை பாக்கிஸ்தான் இரண்டும் சீன அடிமைகள். சீனாவின் கட்டளைகளை தான் செய்யமுடியும். உங்கள் செய்தியை பார்த்தால் ஏதோ தன்னிச்சை முடவு போன்று எழுதியுள்ளீர்கள்ஞ

    ReplyDelete

Powered by Blogger.