இலங்கையின் அதிகூடிய வயதுடைய பெண், கங்கானம் டிங்கிஹாமி தனது 116 ஆவது வயதில் இன்று காலமானார்
இலங்கையின் அதிகூடிய வயதுடைய பெண்ணான கங்கானம் கமகே டிங்கிஹாமி தனது 116 ஆவது வயதில் இன்று (10) இயற்கை எய்தினார்.
மாத்தறை மாவட்டத்தின் கனக்க, இமதூவ பகுதியை சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
கங்கானம் கமகே டிங்கிஹாமி அம்மையாருக்கு 85 மற்றும் 76 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கங்கானம் கமகே டிங்கிஹாமி அம்மையார் தேயிலை தொழிற்துறையில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவருக்கு 50-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர்.
Post a Comment