Header Ads



புலிகளுக்கும், JVP க்கும் பாரிய வேறுபாடு கிடையாது, இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள்


தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள். அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை பவீனப்படுத்த எதிர்தரப்பினர் பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்கிறார்கள் கோவிட் தொற்றுப் பரவலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டு வெற்றிபெற்றுள்ளோம்.

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி செலுத்தல் செயற்திட்டம் வெற்றிப் பெற்றுள்ளமை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள பிரதான வெற்றியாகும்.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை 70 சதவீதத்தினால் அதிகரிப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆகியவற்றின் ஊடாக மின்னுற்பத்தியை விரிவுப்படுத்த பிரத்தியேக திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கையாக காணப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையிலும் மக்களுக்காக அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது அதனை விமர்சிப்பது தவறான செயற்பாடாகும்.நல்லதை சுட்டிக்காட்டும் தன்மை எதிர்தரப்பினருக்கு கிடையாது.

பொருளாதார முன்னேற்றம் மனித உரிமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது கருத்துரைப்பது நகைப்புக்குரியது. மக்கள் விடுதலை முன்னணியினர் ஆரம்பகாலத்தில் பாரிய கலவரங்களில் ஈடுப்பட்டார்கள்.

அவர்களின் கலவரங்களில் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டதை பெரும்பாலான மக்கள் இன்றும் மறக்கவில்லை.

நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழலை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். கடந்த இரண்டு வருடகாலமாக அரசாங்கம் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படாததை எதிர்தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

கோவிட் தடுப்பூசி செலுத்தல் செயற்திட்டம் வெற்றியடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படும் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.   

No comments

Powered by Blogger.