Header Ads



உணவைக் குறைத்து மலிவான, சத்து குறைவான உணவுக்கு மாறிய இலங்கையர்கள் - எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்கிறது FAO


இலங்கையில் விலையுயர்வு மற்றும் உணவுப்பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், உணவு கொள்ளளவைக் குறைத்துள்ளன.

அத்துடன் பெரும்பாலும் மலிவான, குறைவான சத்துள்ள உணவுகளுக்கு மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது, இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் போஷாக்கு நிலை ஆகியவற்றில் ஒட்டுமொத்த எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

FAO என்ற ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஜனவரி 26 அன்று உலகளாவிய தகவல் மற்றும் முன் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது

அதில், அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரைப் பொருட்களின் சராசரி கலோரிகளான 40, 12 மற்றும் 10 சதவிகிதங்களை பல குடும்பங்கள் குறைத்துள்ளன.

பசளை நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக பல குடும்பங்கள் தமது உணவு நுகர்வை குறைத்துள்ளன.

நாட்டின் முக்கிய உணவான அரிசியின் விலை கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பெரும்பாலான சந்தைகளில் உயர்ந்தது.

குறிப்பாக 2022 ஜனவரியில் விலைகள் கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்த விலை அதிகரிப்பு, முன்னைய ஆண்டை விட 50 சதவீதத்திற்கும் அதிகமானது என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த செப்டம்பர் பிற்பகுதியில் 100,000 தொன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்தது,

இதனைத் தொடர்ந்து 2022 ஜனவரி தொடக்கத்தில் 300,000 தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.

இது, 2017 க்குப் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட மிகப்பெரிய அரசி இறக்குமதியாகும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.