Header Ads



கொரோனா நோயாளர் எண்ணிக்கையுடன், கொரோனா மரணங்களும் அதிகரித்து வருகின்றது - Dr அன்வர் ஹம்தானி


வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனச் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனவும், அந்த எண்ணிக்கை தற்போது 12 வீதமாகக் காணப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அன்றாடம் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அந்த எண்ணிக்கை 17 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று கரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது எனவும், அவர்களில் 60 வீதமானோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக்கொள்வதில் மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.