Header Ads



'அபாயா' அணிந்த ஆசிரியை, அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறானது - இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது - சம்பந்தன்


திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள 'ஹபாயா' சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

'ஹபாயா' அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு - சுயமரியாதைக்கு - இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும்.

அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு - கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்" - என்றார். TL

9 comments:

  1. ஐயா அவர்களே தங்களுக்கு ஹபாயா அணிந்த பெண் அடித்த செய்தி மட்டும் தான் தெரியுமோ அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து வார்டில் இருக்கிறாரே அதைப்பற்றி எதுவும் தெரியாதோ

    ReplyDelete
  2. "நல்லா வரும் சமூகம் " ஐயோ! ஐயோ!

    ReplyDelete
  3. "நல்லா வரும் சமூகம் " ஐயோ! ஐயோ!

    ReplyDelete
  4. @Naleen, கழுத்தை நெரிப்பு என்பது ஆசிரியரின் கணவரின் சுத்தப்பொய்

    ReplyDelete
  5. அநியாயம் அதிரடித் தாக்குதல் நடத்தினாலும் அது நிலைத்து நிற்காது. காலம் அதனை சரித்துவிடும். மண் கவ்வும்.

    இனவாதத் தீயால் இன்னெரு இனத்தையே வேரறுக்கத் துணிந்தீர்கள். ஆயினும் வேரறுக்கப்பட்ட மரங்களாக சாய்கப்பட்ட ரணங்கள் ஆறாத நிலையிலுமா இன்னுமொரு இனவாதத் தீயை மூட்டுகிறீர்கள்?

    ReplyDelete
  6. You fought for your lost rights in the past with the south rulers. But now your deny the right of dress code of a another society...

    Why this double standard.... You say we all are Tamil speaking community and need unity... But not ready to allow the another society to follow their dress code (even approved by central government).

    Under this condition, how come you expect Muslims to agree with you for United NORTH-EASTERN proposal.

    If you are not ready to invest peace with others, Do not expect GOD will grant you peace.

    Let us change and respect the rights of every human in this land and stay away from racism..

    ReplyDelete
  7. அடி வாங்காத அம்மா சும்மா உள்ளே உண்மையில் அடி வாங்கிய உம்மா வெளியாக்கப்பட்டு வெளியே ஆசுபத்திரியில் இனத்துவேசம் நாடு நல்லா வாழும் இது உங்கள் அதிகாரமா சீரழிந்த சமூகமே

    ReplyDelete
  8. தமிழர்கள் எப்போதும் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பதை சொல்வார்கள். ஜயா உங்களின் வயதுக்கும், தமிழ் பேசும் மக்களின் கட்சியின் தலைவராக இருப்பதற்கும் தகுந்தவாறு இந்த பதில் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்

    ReplyDelete
  9. @Ajan அடே அஜன் அந்தோனி, அங்க என்ன நடந்ததுன்னு நீ போய் நேர்ல பார்த்தியா? 30 வருடம் சிங்களவனுகளின் பிண‌ந்தின்றவனுகளின் கையும் வாயும் சும்மா இருக்குமா! இப்பொழுது முஸ்லீம்களின் பிண‌மும் இரத்தமும் கேற்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.