Header Ads



நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டபின் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும்


நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கோவிட் தொற்று பரவலையடுத்து, பொருளாதார ரீதியில் இலங்கை பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.

உள்நாட்டிலுள்ள டொலர், ஆடம்பர தேவைகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை நிதியமைச்சு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.