Header Ads



கடலில் காத்துக்கொண்டிருக்கும் எண்ணெய் கப்பல்களை விடுவிக்க டொலர் இல்லை, நிதியமைச்சு மீதும் கம்மன்பில குற்றச்சாட்டு


எண்ணெய் கொள்வனவுக்காக டொலரை தொடர்ச்சியாக வழங்க நிதி அமைச்சு உறுதியளித்திருந்தபோதிலும், அது தற்போதுவரை நடைமுறையாகவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னுரிமையை அறிந்துகொள்ள வேண்டும் என அமைச்சில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பத்திலும், கடலில் எண்ணெய் கப்பல்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.எனினும், டொலர் இல்லை.

தொடர்ச்சியாக கப்பல்களுக்கு, உரிய நேரத்தில் பணத்தை வழங்கி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால், இருப்பிலுள்ள எரிபொருள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே, அடுத்த கப்பல் வரும் வரையில், மட்டுப்படுத்த அளவு எண்ணெய்யையே சந்தைக்கு விடுவிக்க வேண்டியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எண்ணெய்யைக் கொண்டுவர பணம் இருக்க வேண்டும்.

டொலரை தொடர்ச்சியாக வழங்க, கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சு உறுதியளித்தது.

எனினும், அது தற்போதுவரையில் நடைமுறையாகவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், எரிபொருள் விலையை அதிகரிக்க தற்போது வரையில் எவ்வித தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அரசாங்கம் இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இந்த கழுதையை ஓரங்க நாடகம் நடிக்க விட்டு பின்வரிசை பார்வையாளராக நடிக்கின்றது. இ்நதக்கழுதையும் அவ்வப்போது உண்மையைச் சொல்வதைப் போன்றும் அவர் பொதுமக்களோடுதான் இருப்பது போலவும் பாத்திரங்களை நடிப்பதாக அவர் நடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் இந்த நாட்டு மக்கள் இன்னும் புல்லுத்திண்ண ஆரம்பிக்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.