Header Ads



இங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம் சார் அமைப்புக்களுக்கிடையே முக்கிய கலந்துடையாடல் - யூசுப் முப்தியும் பங்கேற்பு (படங்கள்)


அஸ்ஷேஹ் யூசுப் முப்தியுடன்  லெஸ்டரில் இயங்கும் இலங்கை முஸ்லிம்களின் சமூக , சமய அமைப்புகளின்  நிர்வாக உறுப்பினர்களுக்குமான  ஓர் விசேட கலந்துரையாடலும், சந்திப்பும் நேற்று (27/02/2022) ஞாயிறன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலுக்கு 20 நிறுவனங்களைச் சார்ந்த 60 பேர்  கலந்து கொண்டனர். 

SLMS-UK இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  இக்கலந்துரையாடலில் தற்போதைய இலங்கை நிலவரம், எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், எதிர்கால தேவைகள் , கல்வியியல்  தேவைப்பாடுகள் என்பன போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டடது மட்டுமல்லாது இங்கு ஐக்கிய இராச்சியத்தில் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றிய்யும் முப்தி யூசுப் எடுத்துரைத்தார்.

சகேதர்ரர் ஹிஷாம் ஸம்ஸம் பவுன்டேஸன் சம்பந்தமாகவும் அதன் செயற்பாடுகள் மற்றும் அடைவுகள்  பற்றியும் விபரித்தார்.

விசேட அதிதியாக கலந்துகொண்ட MEND அமைப்பின் பிரதானி டொக்டர் ஷவ்கத் இஸ்லாமோபோபியாவும், அதன் சர்வதேச தாக்கங்கள் பற்றியும், அதன் விளைவுகள் ஐக்கிய இராச்சியத்திலும், சர்வதேசத்திலும், எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதைய்யும் அதன் எதிர்வினைகளையும் மிகவும் விபரமாக உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.

இறுதியில் இராப்போசனத்துடன் நிறைவுபெற்ற இச்சந்திப்பு  உட்சாகத்தையும் உத்வேகத்தையும்  கொரோனாவிற்குப் பின்னரான செயற்பாடுகள் , தேவைகள் என்பதை ஊக்குவிப்பதாகவும் அமைந்தது.

SLMS-UK

1 comment:

  1. நல்ல விடயம் யோசிப்பதை இனிமேலாவாது நன்றாக யோசியுங்கள் ஏழை குமர்கள் ஏளைகளின் கல்வி பற்றி கலாச்சாரம் பற்றி யோசித்துப் பாருங்கள் அரசாங்க நாறுவனங்களுக்கு மில்லியன் கணக்கில் பேருக்கும் புகளுக்கும் கொடுக்க யோசிக்கும் விடயங்களை எல்லா முப்திகளும் யோசிக வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.