Header Ads



எரிபொருள் விலைகளை அதிகரிக்கவும் - மத்திய வங்கி அரசாங்கத்திடம் வேண்டுகோள்


எரிபொருள் விலைகளை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்:

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டம் ஈட்டும் நிறுவனமாக இயங்கி வருகிறது. தொடர்ந்தும் அதனை அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது. அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுமன்றி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்கும் அரச வங்கிக் கட்டமைப்பும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பொருளாதார நெருக்கடி நிலைமைகளையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து அதனைப் பாதுகாக்க வேண்டுமானால் அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு எரிபொருள் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதே என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.